இஸ்ரேல் பிரதமரை போர்க்குற்றவாளியாக அறிவிக்குமாறு டிலான் வலியுறுத்து

இஸ்ரேல் பிரதமரை போர்க்குற்றவாளியாக அறிவித்து, அந்நாட்டுடனான இராஜதந்திர உறவுகளை இலங்கை தற்காலிகமாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு வலியுறுத்தினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“உலகில் தற்போது அதிகார அரசியல் மாறியுள்ளது. சீனா மற்றும் ரஷ்ய ஜனாதிபதிகள் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர். எனவே, எல்லாவற்றுக்கும் அமெரிக்கா சரணங் கச்சாமி எனக் கூறிக்கொண்டிருக்கவில்லை. அடுத்த 25 வருடங்களில் உலக பொருளாதார அபிவிருத்தியின் தங்க கதவு ஆசிய பக்கமே உள்ளது.

எனவே, சீனா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளுடனான உறவை பலப்படுத்த வேண்டும். அதற்காக அமெரிக்காவை பகைத்துக்கொள்ளுமாறு கூறவில்லை. ஆனால் அமெரிக்காவின் தாளத்துக்கேற்ப ஆடுவது நிறுத்தப்பட வேண்டும்.

பாலஸ்தீன – இஸ்ரேல் பிரச்சினையின்போதுகூட இஸ்ரேல் பிரதமர் போர்க்குற்றவாளியாக அறிவித்து, இஸ்ரேலுடனான தூதரக உறவை, இடைநிறுத்த வேண்டும். குறைந்தபட்சம் சமாதான உடன்படிக்கை எட்டப்படும்வரையானது உறவு துண்டிக்கப்பட வேண்டும்.” – என்றார்.

 

Related Articles

Latest Articles