இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்புக்கு இடையிலான தற்காலிக போர் நிறுத்தம் மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
நான்கு நாட்கள் போர் நிறுத்தம் இன்றுடன் முடிவுக்கு வரும் நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்தத்திற்கான பேச்சுக்கு கட்டார் மத்தியஸ்தம் செய்து வருகின்றது. இந்நாடுதான் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்துவந்த போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, இருதரப்பும் தாம் சிறைப் பிடித்த மக்களை கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து விடுதலை செய்துவருகின்றன.
போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, ஹமாஸ் 50 பணயக் கைதிகளை விடுவிக்க, இஸ்ரேல் 150 பாலத்தீனக் கைதிகளை விடுவிக்க வேண்டும். இந்நிலையில் இஸ்ரேல் தனது சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 117 பாலத்தீனக் கைதிகளையும், ஹமாஸ் தாம் பணயக் கைதிகளாகப் பிடித்துவைத்திருந்த 40 பேரையும் இதுவரை விடுவித்திருக்கின்றன.