விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளரான ஜயந்த சமரவீர, இராஜாங்க அமைச்சு பதவியை இராஜினாமா செய்துள்ள நிலையில், அந்தப் பதவியை தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வழங்குமாறு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச ஊடாக, ஜனாதிபதியிடம் மேற்படி யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கமைய அரசுக்கு ஆதரவு வழங்கும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அல்லது ஈபிடிபியின் உறுப்பினர் ஒருவருக்கு, வெற்றிடமாகவுள்ள இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்படக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
எனினும், ஈபிடிபியின் தலைவர் அமைச்சு பதவியை வகிப்பதாலும், இ.தொ.காவின் பொதுச்செயலாளர் இராஜாங்க அமைச்சு பதவியை வகிப்பதாலும் அரவிந்தகுமார் அல்லது ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் ஒருவருக்கு அந்தப் பதவி வழங்கப்படலாம் எனவும் அரச வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.