ஈரான் மக்களால் இப்ராஹிம் ரைசி அதிகம் நேசிக்கப்படுவது ஏன்?

63 வயதான இப்ராஹிம் ரைசி, அந்த நாட்டில் மிகப் பெரிய ஆளுமை திறன் கொண்டவராக இருந்தது எப்படி என்பது பார்க்கலாம்.

ரைசி தனது 15 ஆவது வயதிலேயே மத போதனைகளை சொல்லித் தரும் ஒரு புகழ்பெற்ற பள்ளியில் படித்தார். அந்த காலத்தில் அவர் நிறைய முஸ்லீம் அறிஞர்களிடம் பாடங்களை கற்றறிந்தார்.

தனது 20ஆவது வயதில் அரசு தரப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அரசு தரப்பு துணை வழக்கறிஞராக பதவியேற்றார்.

பிறகு 1983 ஆம் ஆண்டு ஜமீலா அலமோல்ஹோடா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனர். 1988 ஆம் ஆண்டு அரசியல் கைதிகளை தூக்கிடும் குழுவை மேற்பார்வையிடும் குழுவின் ஒரு உறுப்பினராக 5 மாதங்கள் இருந்தார்.

இவரது செயலுக்கு கடும் எதிர்ப்பு நிலவிய நிலையில் ரைசிக்கு அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது. ஈரானின் முதல் தலைவர் அயோதுல்லா ருஹோல்லா கோமைனி இறப்புக்கு பின்னர் 1989 ஆம் ஆண்டு டெஹ்ரானின் தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் 62 சதவீத வாக்குகளை பெற்று ரைசி ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டார்.

ஈரான் நாட்டில் ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கக் கூடிய சமூக ஆர்வலர், மூத்த அரசியல் தலைவர், ஏழைகளின் நாயகன் என ரைசி அழைக்கப்பட்டு வந்தார். ஈரான் நாட்டில் ஊழலுக்கு எதிராக மக்களிடையே இவர் அடிக்கடி பிரச்சாரம் செய்தால்தான் இந்த தேர்தலில் வென்றார். மேலும் ஊழல் செய்யும் உயரதிகாரிகள் யாராக இருந்தாலும் அவர்களுடைய பெயர், விவரங்களை பொதுவெளியில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் ரைசி.

கடந்த 2015 ஆம் ஆண்டு அமெரிக்காவுடன் அணு ஆயுத ஒப்பந்தத்தல் முன்னாள் ஜனாதிபதி ஹாசன் ரோஹானி கையெழுத்திட்டதை ரைசி கடுமையாக விமர்சித்திருந்தார்.

ஈரானுக்கு விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை நீக்கி அதன் சர்வதேச வர்த்தகத்தை மேம்படுத்தினார். அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் எதிர்ப்பை சம்பாதித்திருந்தாலும் ஈரான் பொருளாதாரத்தை முன்னுக்கு கொண்டு வந்ததில் ரைசி சிறந்த தலைவராக கருதப்படுகிறார்.

அடுத்து என்ன?

ஈரானின் அரசியலமைப்பின் படி, ஜனாதிபதி இப்ராஹிம் ரெய்சி மரணத்திற்குப் பிறகு, துணை ஜனாதிபதி முகமது மொக்பர் தான் தற்காலிக தலைமையை ஏற்றுக் கொள்ள இருக்கின்றார்.
ஈரான் நாட்டின் நீதித்துறை தலைவர் மற்றும் சபாநாயகர் ஆகியோர் இணைந்து 50 நாட்களுக்குள் புதிய ஜனாதிபதி தேர்தலை நடத்த இருக்கிறார்கள்.

Related Articles

Latest Articles