ராஜபக்சக்களின் பணம் உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு உள்ள நிலையில், அவற்றை நாட்டுக்கு கொண்டுவருமாறு மீண்டும் வலியுறுத்தியுள்ளார் நாமல் ராஜபகச்.
“ அரசாங்கத்துடன் எமக்கு டீல் கிடையாது. ஆனால் தேசிய மக்கள் சக்தியினர் அன்று கூறிய விடயங்கள், பொய்யென தற்போது நிரூபனமாகிவருகின்றது. எனவே, இனியாவது பொய் சொல்லுவதை நிறுத்துங்கள்.
நாமல் ராஜபக்சவின் 18 டொலர் பில்லியன் வெளிநாட்டில் இருப்பதாகக் கூறினர். அதனை நாட்டுக்கு எடுத்துவரவும். வாகனங்கள் பதுக்கப்பட்டிருந்தால் அவற்றையும் கொண்டுவாருங்கள்.
நாட்டுக்கு தற்போது டொலர் தேவை, எனவே, உகண்டாவில் உள்ளது எனக் கூறப்படும் எனது 18 பில்லியன் டொலர்களை உடன் கொண்டுவரவும்” – எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டார்.










