‘உக்ரைன் -ரஷ்யா போர்’ – இலங்கை நடுநிலை

உக்ரைன்மீது ரஷ்யா தொடுத்துள்ள போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற தீர்மானத்தின்மீதான வாக்கெடுப்பின்போது இலங்கை நடுநிலை வகித்துள்ளது.

ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தின்போது நடத்தப்பட்ட இந்த வாக்கெடுப்பின் தீர்மானத்துக்கு ஆதரவாக 140 நாடுகள் வாக்களித்துள்ளன.

ரஷ்யா, பெலாரஸ், சிரியா, வட கொரியா உட்பட 5 நாடுகள் எதிராக வாக்களித்துள்ளன.

இலங்கை, இந்தியா, சீனா உள்ளிட்ட 38 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.

Related Articles

Latest Articles