உண்ணாட்டரசிறை சட்டமூலம் நிறைவேற்றம் ! முற்போக்கு கூட்டணி எதிர்த்து வாக்களிப்பு!!

பாராளுமன்றத்தில் நேற்றும் இன்றும் விவாதத்துக்கு எடுக்கப்பட்ட உண்ணாட்டரசிறை (திருத்த) சட்டமூலம் 45 மேலதிக வாக்குகளால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

இந்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக 103 வாக்குகளும், எதிராக 58 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதற்கமைய 45 மேலதிக வாக்குகளால் இச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. தமிழ் முற்போக்கு கூட்டணி எம்.பிக்கள் எதிர்த்து வாக்களித்தனர்.

இதனைத் தொடர்ந்து குழுநிலையில் திருத்தங்கள் முன்வைக்கப்பட்ட பின்னர் மூன்றாவது மதிப்பீடு வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.

அத்துடன், சமூகப் பாதுகாப்பு உதவுத்தொகை அறவீடு (திருத்த) சட்டமூலம் வாக்கெடுப்பின்றி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

Related Articles

Latest Articles