மஸ்கெலியா, சாமிமலை குயில்வத்த தோட்டத்தில் 19 வயது மாணவரொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இத்துயர் சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.
மஸ்கெலியா, புளூம்பீல்ட் தேசிய பாடசாலையில் உயர்தர கலைப்பிரிவில் இறுதியாண்டில் கல்வி பயின்றுவந்த தனுஷன் என்ற மாணவரே இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.

இவரது தந்தை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார். தாயின் பராமரிப்பில் குறித்த மாணவன் கல்வி பயின்றுவந்துள்ளார்.
உரிய விசாரணைகளின் பின்னர் சடலம் நேற்று உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
(ஞானராஜ்)
