” நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை மதிக்க வேண்டும். அதற்கு எதிராக செயற்பட முடியாது.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மஹிந்த மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பொறுப்புக்கூற வேண்டியவர்களில் மஹிந்தவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
” நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை மதிக்க வேண்டும். நீதிமன்றத்துக்கு எதிராக எம்மால் செல்ல முடியாது. குறிப்பாக நான் சட்டத்தரணி என்பதால் அவ்வாறு செயற்பட முடியாது. மக்களுக்காக நாம் எந்நேரத்திலும் முன்னிலையாவோம்.” – எனவும் மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டார்.