உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் குறித்து விசாரிக்க 9 பேரடங்கிய விசாரணைக்குழு – சஜித் உறுதி!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தான் நேற்று கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்காத காரணத்தினாலும், அதற்கு அரசாங்கம் நீதி வழங்காத காரணத்தினாலும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மக்களால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால், உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்தியவர்களை தேடி அறிவதற்கு தாம் பின்பற்றும் வழிமுறைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று(02) பாராளுமன்றத்தில் தெளிவுபடுத்தினார்.

இதன் பிரகாரம், புதிய ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 2 மாதங்களுக்குள் 1948 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க விசாரணை ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ், 7 முதல் 9 தேசிய மற்றும் சர்வதேச அங்கத்தவர்களைக் கொண்ட ஒரு ஆணைக்குழு நியமிக்கப்படும். இதன் மூலம் கடந்த கால மற்றும் தற்போதைய காலகட்டத்தின் முழு பாதுகாப்பு வேலைத்திட்டம் குறித்து ஆய்வு செய்து, எந்தவொரு நிறுவனத்திலும் எந்தவொரு நபரிடமும் எவ்வித தடையுமின்றி வாக்குமூலங்களைப் பெற்றுக் கொள்ள இவ்வாணைக்குழுவிற்கு அதிகாரம் வழங்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஆணைக்குழுவை நிறுவிய 6 வாரங்களுக்குள் அதனுடன் இணைந்து பணியாற்ற ஸ்கொட்லாந்து யாட், எப்.பி.ஐ வெளிநாட்டு புலனாய்வு மற்றும் பாதுகாப்பு சேவைகள், தேசிய புலனாய்வுத் துறை மற்றும் பாதுகாப்பு தரப்புகளைக் கொண்ட நிரந்தர விசாரணை அலுவலகம் நிறுவப்படும். ஆணைக்குழுவின் பரிந்துரைகள் மற்றும் உத்தரவுகளுக்கு உட்பட்டு இலங்கையின் சட்டங்களின் கீழ் குற்றப்பத்திரிகைகளை சமர்ப்பிக்க அல்லது தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது சட்டமா அதிபருக்கு கட்டாயமாக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

1948 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க விசாரணை ஆணைக்குழுச் சட்டத்தின் 7 (2) அல்லது பிரிவு 24 திருத்தப்படும். மேற்கண்ட குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் மீது தீர்ப்பு வழங்க நிரந்தர உயர்நீதிமன்றம் நிறுவப்பட வேண்டும். இதற்காக 1978 ஆம் ஆண்டு 2 ஆம் இலக்க நீதித்துறை கட்டமைப்புச் சட்டத்தின் 12 ஆவது பிரிவைத் திருத்த நடவடிக்கை எடுக்கப்படும். சட்டமா அதிபரை சாராத அரச தரப்பு வழக்கறிஞர் அலுவலகத்தை நிறுவுவதற்கான சட்டமூலம் கொண்டு என் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

 

Related Articles

Latest Articles