மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா வழங்கப்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்தி தொழில் ஆணையாளரால் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படை சம்பளமாக 1350 ரூபா மற்றும் ஊக்குவிப்புக் கொடுப்பனவாக 350 ரூபா என்ற வகையில் நாளாந்தம் 1700 ரூபா சம்பளத்தை அதிகரிக்கும் வகையிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது.
இதற்கு முதலாளிமார் சம்மேளனம் ஆட்சபனை வெளியிட்டிருந்தது. அதேபோல ஆயிரத்து 700 ரூபா அவசியம் என்ற நிலைப்பாட்டில் தொழிற்சங்கங்களும் உறுதியாக நின்றன.
இந்நிலையிலேயே ஆயிரத்து 700 ரூபா வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
