உலகத்திற்கு முன் சண்டியர்களாக செயற்பட முடியாது – பந்துல குணவர்தன

உலகத்திற்கு முன் சண்டியர்களாக செயற்பட முடியாது என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலுள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போக்களுக்கு இந்திய அரசாங்கத்தினால் கடன் உதவித் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட புதிய பஸ்கள் கையளிக்கும் நிகழ்வு இன்று (09) போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் நுவரெலியா கிரகரி வாவி பகுதியில் இடம்பெற்றது.

இதில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே போக்குவரத்து அமைச்சர் இதனை கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

எந்தவித அரசியல் தலையீடும் இன்றி போக்குவரத்து கூட்டுதானத்திற்கு தலைவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலைமையை மாற்ற என்னால் முடிந்தது.

இதுவரை ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் வருமானத்திற்கு அதிகமாகவே செலவு செய்துள்ளனர். எரிப்பொருள் மின்சாரம் என்பவற்றிலும் இந்த நிலைமை உள்ளது. ஈஸ்டர் குண்டு தாக்குதல் போன்றவற்றால் சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்தது.

கொவிட் தொற்றும் வந்தது. அதே போன்று நாம் எடுத்த வரி சுதந்திரம் உள்ளிட்ட தவறான முடிவுகளும் இதற்கு காரணங்களாகும். முன்னாள் அரசாங்கமும் எடுத்த கடனை அடுத்து வரும் அரசாங்கம் செலுத்த வேண்டும். உலகத்திற்கு முன் சண்டியளர்களாக செயற்பட முடியாது. ஆகவே கடனை மீள செலுத்த பிரான்ஸ் நிறுவனம் உதவியை கேட்டுள்ளோம்.

2025 ஆண்டாகும் போது போக்குவவரத்துசபையின் பணத்தை வெளி செல்ல விடாது. பாதுகாத்தால் அதனை உங்களுக்கு மீள வழங்குவேன் என உறுதியளிக்கின்றேன் என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles