இரத்தினபுரி, காவத்தை பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 510 கிலோ கிராம் நிறையுடைய மாணிக்கக்கல் டுபாயிக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
டுபாயிக்கு அனுப்பி வைப்பதற்காக இன்று கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு எடுத்துவரப்பட்டுள்ளது.
டுபாயில் இடம்பெறவுள்ள மாணிக்கக்கல் கண்காட்சிக்காக கொண்டுச் செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.