ஜோன் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் (John Hopkins University) பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹான்கியால் இரு வாரங்களுக்கு ஒருமுறை வெளியிடப்படும் உலகின் மிகை பணவீக்க நாடுகளின் பட்டியலில் இருந்து ஏறக்குறைய ஒரு வருடத்தின் பின்னர் இலங்கை நீக்கப்பட்டுள்ளது.
அவரது பணவீக்கச் சுட்டெண் படி, ஒரு காலத்தில் இரண்டாவது இடத்தில் இருந்த இலங்கை, ஆசியாவிலேயே அதிக பணவீக்கத்தைக் கொண்ட நாடாகவும் இருந்தது.
எனினும் அவர் கடந்த மார்ச் மாதம் 23ஆம் திகதி வெளியிட்ட சுட்டெண்ணில் இருந்து இலங்கை நீக்கப்பட்டு 18 நாடுகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
