2025 ஆம் ஆண்டு உலக அரசுகள் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு விஜயம் செய்யவுள்ளார் என்று வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் முகமது பின் சயீத் அல் நஹ்யானின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்தப் பயணத்தை மேற்கொள்கின்றார் என்று அமைச்சகம் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்தப் பயணத்தின்போது, ஜனாதிபதி ‘2025 உலக அரசுகள் உச்சி மாநாட்டில்’ உரையாற்றவுள்ளார்.
இலங்கைக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் இடையிலான பரஸ்பர ஆர்வமுள்ள பல துறைகள் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இரு தரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார் என்றும் வெளியுறவு அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.