உள்ளாட்சிசபைத் தேர்தலில் களமிறங்குவதற்காக விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியில் தலைமையின்கீழ் தேசப்பற்று கூட்டணியொன்று ஸ்தாபிக்கப்படும் என்று முன்னணியின் பிரதித் தலைவர் முன்னாள் எம்.பி. ஜயந்த சமரவீர தெரிவித்தார்.
உள்ளாட்சிசபைத் தேர்தலுக்கான தேசிய சுதந்திர முன்னணியின் ஏற்பாடு பற்றி எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் மேலும் கூறியவை வருமாறு,
‘உள்ளாட்சிசபைத் தேர்தலில் தேசிய சுதந்திர முன்னணி தலைமையிலான கூட்டணியில் போட்டியிடுவோம். அதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டுவருகின்றது. விலைபோகாத தரப்புகளை உள்ளடக்கிய தேசியப்பற்றுள்ள கூட்டணியாக செயற்படுவோம்.
அதேவேளை மாகாணசபைத் தேர்தலிலும் போட்டியிடுவோம்.”- என்றார்.
