உள்ளாட்சி தேர்தல் குறித்து பிரதமர் வழங்கியுள்ள உறுதிமொழி

” உரிய நடைமுறைகளைப் பின்பற்றி சட்டத்துக்குட்பட்ட வகையில் உள்ளாட்சிசபைத் தேர்தல் நடத்தப்படும். இது விடயத்தில் எதிரணிகள் பதற்றப்பட வேண்டியதில்லை.”

இவ்வாறு பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

நாடாளுமன்றம் நேற்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.

இதன்போது உள்ளாட்சிசபைத் தேர்தல் எப்போது நடத்தப்படும், தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் அஞ்சுகின்றதா என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே பிரதமர் இவ்வாறு கூறினார்.

” தற்போது செப்டம்பர்மாதம் தான் ஆகின்றது. இன்னும் காலம் உள்ளது. எதிரணிகள் இன்று கலக்கடைந்துள்ளன. அவ்வாறு பதற்றமடைய வேண்டியதில்லை. உரிய நேரத்தில், உரிய வகையில் தேர்தல் நடத்தப்படும். இது விடயத்தில் தேர்தல் ஆணைக்குழுவுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எதிரணிகளின் அவசரத்துக்காக தேர்தலை நடத்த முடியாது, அதற்கான நடைமுறைகள் உள்ளன.” – என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles