உள்ளூராட்சிசபைத் தேர்தலுக்காக கையளிக்கப்பட்டுள்ள வேட்புமனுக்களை இரத்து செய்வதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.
பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நேற்று நடைபெற்ற பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சு ஆலோசனைக் குழு கூட்டத்திலேயே இது தொடர்பில் இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.










