” ஊடகங்களை ஒடுக்க முற்படும் அரசின் முயற்சியை தோற்கடிப்போம்” – சஜித்

அரசின் ஊடக அடக்குமுறை முயற்சியானது பயங்கரவாதமாகும். அதனை தோற்கடிப்பதற்கு மக்களுடன் இணைந்து போராடுவோம்.” – என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

” தற்போதைய அரசு எல்லா சந்தர்ப்பத்திலும் மக்களின் சுதந்திரத்தை இல்லாதொழிக்க முயற்சிக்கின்றது. அதன் புதிய போக்கே சமூக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடக வலையமைப்புகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையாகும்.

அந்நோக்கத்திற்காக, நிகழ் நிலைக் காப்பு என்ற வார்த்தை முன்வைக்கப்பட்டு, சமூக ஊடகங்களின் உரிமை அரசால் கையகப்படுத்தப்பட்டு ஊடகங்களை ஒடுக்கும் செயற்பாட்டுக்கான முனைப்பு நடைபெறுகின்றது.

அரசின் இந்த ஊடக அடக்குமுறையானது பயங்கரவாதம் என்பதால் இதற்கு இடம்கொடுக்கப்போவதில்லை இந்த ஊடக ஒடுக்குமுறைக்கும் சமூக ஊடகங்களின் கட்டுப்பாட்டிற்கும் எதிராக மக்களுடன் வீதியில் இறங்கிப் போராடுவோம்.

சமூக ஊடகங்களின் நிகழ்ச்சி நிரல்களை ஜனாதிபதி மற்றும் நாட்டின் அரசின் கைகளில் எடுக்கப் போகும் இந்த முயற்சிகளில் இன்னொரு போராட்டம் உருவாகும். இதன் மூலம் பெரிய பதவிக் கதிரை கூட இழக்கப்படலாம். ” – எனவும் சஜித் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles