மூத்த ஊடகவியலாளர் அமரர். இராஜநாயகம் பாரதி அவர்களுக்கு , நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு 15.02.2025. இன்று , காசல்ரீ பகுதியில் உள்ள சமஹவுஸ் விருந்தகத்தில் நடைபெற்றது.
நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் டக்லஸ் நாணயக்கார, செயலாளர் திலங்க காமினி , பொருளாளர் மு. இராமசந்திரன், தேசிய அமைப்பாளர் எஸ்.தியாகு மற்றும் நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர்கள் ஆகியோர் இனைந்து அண்ணாரின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர்.
பொகவந்தலாவ நிருபர் எஸ் சதீஸ்




