ஊரடங்கில் நடமாடியோருக்கு கொரோனா பரிசோதனை

பயணத்தடை வேளையில் யாழ் நகரில் நடமாடியோருக்கு இன்றையதினம் துரித என்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

நாடு பூராகவும் தற்போதுள்ள கொரோனா நிலைமையினை கட்டுப்படுத்தும் முகமாக பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் யாழ் நகரில் பயணித்தடை வேளையில் நடமாடியோருக்கு யாழ் மாநகரசபை சுகாதாரப் பிரிவினரால் ஏன்டியன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பிரதேச செயலாளர், யாழ்ப்பாண மாநகரசபை சுகாதாரப் பிரிவினர், பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் இணைந்து நகரப்பகுதியில் பயணிப்போரை வழிமறித்து அன்ரியன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles