ஊரடங்கு உத்தரவு மேலும் ஒரு வாரம் நீடிக்கும் சாத்தியம்

நாட்டில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் மேலும் நீடிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக சுகாதார தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் கொவிட் தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளமையினால் கடந்த வெள்ளிக்கிழமை முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி காலை 4 மணிவரை நாடு முழுவதும் தினமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளது.

இதற்கிடையில் தொற்றாளர்களின் எண்ணிக்கையும், மரண விகிதமும் நாளாந்தம் அதிகரித்துவருகின்றது. இதனால் அடுத்த இரு வாரங்கள் தீர்க்கமானவை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, 10 நாட்களுக்கு பிறகும் மேலும் ஒரு வாரம் அல்லது இரு வாரங்களுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீடிக்கப்படலாம் என தெரியவருகின்றது. இது தொடர்பில் வெள்ளிக்கிழமை இறுதி முடிவெடுக்கப்படும்.

அதேவேளை, தற்போது ஊரடங்கு உத்தரவை நீடிப்பது தொடர்பில் அரச தரப்பில் இருந்து இன்னும் உத்தியோகப்பூர்வமாக எவ்வித தகவலும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles