நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் அச்சட்டத்தையும் தனிமைப்படுத்தல் விதிமுறைகளையும் அப்பட்டமாகமீறி ஆன்மீக வழிபாட்டில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது என சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
கொட்டகலை சுகாதார பிரிவுக்குட்பட்ட திம்புள்ள, போகாவத்தை தோட்டத்திலுள்ள கோவிலியேயே நேற்று மாலை இப்பூஜை வழிபாடு இடம்பெற்றுள்ளது.
பூஜையில் பங்கேற்றவர்கள் சமூக இடைவெளியை மறந்து செயற்பட்டதுடன், முகக்கவசத்தைக்கூட முறையாக அணிந்திருக்கவில்லை.
எனவே, கோவிலின் நிர்வாக சபைக்கு எதிராகவே சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
குறிப்பு (மக்களே அவதானம், கொரோனா தொற்று வேகமாக பரவிவருகின்றது. புதிய பிறழ்வுகள் அடையாளம் காணப்படுகின்றது. ஒருவரில் இருந்து இன்னொருவருக்கு தொற்று இலகுவில் பரவக்கூடும். நெருக்கடி நிலையால்தான் பல சவால்களுக்கு மத்தியிலும் நாடு முடக்கப்பட்டுள்ளது.
எனவே, இவ்வாறான செயல்களில் ஈடுபடவேண்டாம். சமூக பொறுப்பை உணர்ந்து செயற்படவும். இறைவனை வழிபட வேண்டாம் என கூறவில்லை. வீட்டில் இருந்து வழிபடுங்கள். பொதுவெளியில் ஒன்றுகூடுவதற்கு இது பொருத்தமான சூழல் கிடையாது. சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்ற நோக்கிலேயே இச்செய்தி வெளியிடப்படுகின்றது. )
