எச்.ஐ.வி. தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2023 முதற்காலாண்டில் எச்.ஐ.வி தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய பாலியல் நோய் / எய்ட்ஸ் தடுப்பு திணைக்கள புள்ளிவிபரத் தகவல்களில் தெரியவந்துள்ளது.

எச்.ஐ.வி தொற்றால் 2022 முதல் காலாண்டில் 4,404 பேர் பாதிக்கப்பட்டதாக இனங்காணப்பட்டனர். இந்நிலை, இவ்வாண்டில் சுமார் 600 பேரால் அதிகரித்து 5,011 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், இவ்வருட முதற்காலாண்டில் 3,806 ஆண்களும் 1,361 பெண்களும் எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக இனங்காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, 15 வயதுக்கும் 24 வயதுக்குமிடைப்பட்ட 23 ஆண்களும், மூன்று பெண்களும் இத்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.எச்,ஐ,வி தொற்றுக்களால் பாதிக்கப்படு பவர்களில் பெண்களை விட, ஆண்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளதையும் புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.

இதேவேளை, மாற்றுப்பாலினத்தவர்கள் ஒன்பது பேரும் இத்தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

எச்.ஐ.வி தொற்றினால் இவ்வாண்டில் இதுவரையிலான காலப்பகுதியில் 15 பேர் மரணமானமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles