எதிரணிகள் ஒன்றுபட வேண்டும். அது நல்லது. அதனை நாம் வரவேற்கின்றோம் என்று அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிராக எதிரணிகளால் எதிர்வரும் 21 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள பேரணி தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“ எதிரணிகளின் போராட்டம் பற்றி அத்தரப்புகளிடம்தான் கேட்க வேண்டும். இருந்தாலும் எதிரணிகள் ஒன்றுபட வேண்டும். அவ்வாறு ஒன்றிணைவது நல்லது. ஆனால் அது சாத்தியப்படுமா என்பது சந்தேகமே.
நாம் கூட்டமொன்றை நடத்துவதாக இருந்தால் ஒரு கிழமைக்கு முன்பு இருந்துதான் தயார்படுத்தல் இடம்பெறும். ஆனால் இவர்கள் ஒரு மாதத்துக்கு முன்னரே தயாராகிவிட்டனர். மக்களை திரட்டுவதற்கு இவர்களுக்கு ஒரு மாதம் செல்லும் என்பது இதன்மூலம் புலப்படுகின்றது.
நாம் எதிரணியில் இருக்கும்போது சிறப்பாக செயல்பட்டோம். இணைய வேண்டிய இடங்களில் இணைந்து பயணித்தோம். இது ஜனநாயக பண்பாகும்.” எனவும் அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி குறிப்பிட்டார்.
