எதிரணி கூட்டுக்கு முதல் அடி: பண்டாரவளை மாநகர சபையில் மலர்ந்தது என்.பி.பி. ஆட்சி!

உள்ளுராட்சிசபைத் தேர்தலில் ஆட்சியமைப்பதற்குரிய அறுதிப்பெரும்பான்மை பலத்தை பெறாத பண்டாரவளை மாநகரசபையிலும் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்துள்ளது.

16 உறுப்பினர்களைக் கொண்ட பண்டாரவளை மாநகரசபைக்கு உள்ளுராட்சிசபைத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு ஆறு இடங்கள் கிடைக்கப்பெற்றன.

ஐக்கிய மக்கள் சக்திக்கு மூன்று இடங்களும், மொட்டு கட்சிக்கு ஒரு இடமும் கிடைக்கப்பெற்றது. சுயேச்சைக்குழு 1 ஐந்து இடங்களையும், சுயேச்சைக்குழு 2 ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியது.

ஆட்சியமைப்பதற்குரிய அறுதிப்பெரும்பான்மை பலத்தை எந்த ஒரு கட்சியும், சுயேச்சைக்குழுவும் பெறவில்லை. சிலவேளை எதிரணிகள் ஒன்றிணைந்தால் ஆட்சி அமைத்திருக்கக்கூடும்.

அப்படி இருந்தும் தேசிய மக்கள் சக்தியே ஆட்சியமைத்துள்ளது. இரு சுயேச்சைக்குழு உறுப்பினர்கள் என்.பி.பி.க்கு ஆதரவளித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்திக்கு 3 இடங்கள் இருந்தும், வாக்கெடுப்பில் உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை. எனவே,   வாக்கெடுப்பில் 13 உறுப்பினர்களே பங்கேற்றிருந்தனர்.

அதேவேளை, தேசிய மக்கள் சக்தி அறுதிப்பெரும்பான்மை பலத்தை பெறாத சபைகளில் ஒன்றாக இணைந்து ஆட்சியமைப்பதற்கு எதிரணிகள் பேச்சுகளை முன்னெடுத்துவந்தன. எனினும், அந்த முயற்சி இன்னும் கைகூடவில்லை என்பதே இம்முடிவு வெளிப்படுத்துகின்றது.

Related Articles

Latest Articles