அடுத்து என்ன தேர்தல் நடைபெற்றாலும் அதனை எதிர்கொள்வதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தயாராகவே உள்ளது என்று நீதி இராஜாங்க அமைச்சர் அநுராத ஜயரத்ன தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கண்டி மாவட்ட கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அத்துடன், இடதுசாரி கட்சிகள் தேர்தலின்போது ஒன்றுபட வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
மே தினக் கூட்டத்துக்கான ஏற்பாடுகள் பற்றியே இன்றைய கூட்டத்தில் ஆராயப்பட்டது எனவும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.
அதேவேளை, இதன்போது கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மே தினக் கூட்டம் கொழும்பு, கெம்பல் பார்க் மைதானத்தில் நடைபெறும் என்று கூறினார்.
