எனக்கு ஒரு சைக்கிள்கூட இல்லை: முன்னாள் எம்.பி. அரசியலில் இருந்து ஓய்வு!

ஐக்கிய மக்கள் சக்தியின் பானதுறை தொகுதி அமைப்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான லலித் எல்லாவல அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாக நேற்று அறிவித்துள்ளார்.

தகுதியான தலைவர்கள் இல்லையென்பதாலேயே அரசியலில் விரக்தியடைந்து தான் இந்த முடிவை எடுத்தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“ 1989 ஆம் ஆண்டு எனது அரசியல் பயணம் ஆரம்பமானது. பிரதேச சபை, மாகாணசபை உறுப்பினர் மற்றும் நாடாளுமன்றத்தில் நான்கு வருடங்கள் அங்கம் வகித்தேன்.

அரசியலுக்கு வரும்போது ஒரு சைக்கிள்கூட இருக்கவில்லை. தற்போதும் சைக்கிள் ஒன்றுகூட இல்லாமல்தான் விடைபெறுகின்றேன்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் போலியான வாக்குறுதிகளை வழங்கிவருகின்றார். அதே வழியில் அக்கட்சி பயணித்தால் யானை உண்ட விளாம்பழத்தின்நிலைதான் ஏற்படும்.” – எனவும் எல்லாவல குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles