“தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கொள்ளையர்களை பாதுகாக்கவில்லை. புதிய அரசாங்கத்தின்கீழ் கிடைக்கப்பெற்ற மிகப்பெரிய வெற்றி இதுவாகும். இதனை நிச்சயம் வரவேற்கவேண்டும்.”
இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” சில துறைகளில் இந்த அரசாங்கம் பலவீனமாக உள்ளது என்பது தெரிகின்றது. சிற்சில குறைப்பாடுகள் உள்ளன என்பது ஆட்சியாளர்களுக்கும் தெரியும்.
எது எப்படி இருந்தாலும் கள்வர்களை பாதுகாத்தல் என்ற விடயத்தில் இருந்து இந்த அரசாங்கம் நாட்டை பாதுகாத்துள்ளது. குறுக்கு வழியில் சென்று கள்வர்களால் தப்ப முடியாது.
குற்றவாளிகள் சட்டத்தின் பிடிக்குள் சிக்கினால், அவரை பாதுகாக்க அரசாங்கம் தலையிடுவதில்லை.
புதிய ஆட்சியின்கீழ் மக்களுக்கு கிடைக்கப்பெற்ற மிகப்பெரிய வெற்றி இதுவாகும். இதற்குரிய கௌரவத்தை அரசாங்கத்துக்கு வழங்க வேண்டும். கடந்த ஆட்சியாளர்களின்கீழ் இப்படி நடக்கவில்லை. கடந்த காலங்களில் கொள்ளையர்கள் பாதுகாக்கப்பட்டனர்.
நான் அரசியலமைப்பை மதிப்பவன். சட்டத்தை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்படுபவன். இராணுவத்தில் இருந்தபோதும் அரசியல்வாதிகளை அல்ல, அரசமைப்பை பாதுகாக்கவே செயற்பட்டோம்.” – என்றார்.