” எமது கட்சி எம்.பிக்கள் அரசுடன் இணையமாட்டர்” – அறிவிப்பு விடுத்தது ஐக்கிய மக்கள் சக்தி!

” ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள், அரசுடன் இணையமாட்டார்கள். எதிரணியை பலவீனப்படுத்தும் நோக்கிலேயே கட்சி தாவல் கதை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

ஐக்கிய மக்கள் சக்தி உட்பட எதிரணியில் உள்ள 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசுடன் இணையவுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ள நிலையிலேயே, அவற்றை நிராகரிக்கும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தி மேற்கண்டவாறு அறிவிப்பு விடுத்துள்ளது.

Related Articles

Latest Articles