எம்.பிக்களுக்கான உணவுக் கட்டணம் 4 மடங்கால் அதிகரிப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று (05) முதல் தங்களது உணவுக்காக ரூ. 2000 செலுத்த வேண்டும்.நாடாளுமன்றத்தில் உணவுகளின் விலையானது இம்மாதம் 1ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டது.

அதன்படி, இம்மாதத்திற்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று (05) ஆரம்பித்துள்ளதால் இன்று முதல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது உணவுக்கான அதிகரிக்கப்பட்ட விலையை செலுத்த வேண்டும்.

நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து உணவுக்காக நாளாந்தம் அறவிடப்பட்ட தொகையானது ரூ. 2000 வரையில் அதிகரிக்கப்பட வேண்டும் என கடந்த 23ஆம் திகதி நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, நாடாளுமன்ற உணவகத்தில் காலை உணவின் விலை ரூ. 600 ஆக அதிகரிக்கப்பட்டதுடன், பகல் உணவின் விலை ரூ. 1200 ஆகவும், தேநீரின் விலை ரூ. 200 ஆகவும் அதிகரிக்கப்பட்டது.

இதற்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு காலை உணவு, மதிய உணவு மற்றும் தேநீருக்காக நாளொன்றுக்கு 450 ரூபா அறிவிடப்பட்டுவந்தது.

 

Related Articles

Latest Articles