கட்சி கோரிக்கை விடுக்கும்பட்சத்தில் வடமேல் மாகாணசபை முதல்வர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன் என்று இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
” இதற்காக பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் துறப்பதற்கு நான் தயார். வடமேல் மாகாணத்தில் இருந்து பல தரப்பினரும் எனக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.” – என்றும் தயாசிறி ஜயசேகர கூறினார்.

ஐக்கிய தேசியக்கட்சியில் இருந்து வெளியேறி சுதந்திரக்கட்சியில் இணைந்த பின்னர், வடமேல் மாகாண தேர்தலில் தயாசிறி ஜயசேகர போட்டியிட்டார். அத்தேர்தலில் வெற்றிபெற்ற அவர் முதல்வராக பதவி வகித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
