எம்.வாமதேவனின் இரு நூல்கள் வெளியீடு ஒரே மேடையில்

மலையகத்தின் மூத்த கல்விமான், முன்னாள் அமைச்சு செயலாளர் மற்றும் நிதி ஆணைக்குழுவின் உறுப்பினர் எம்.வாமதேவன் எழுதியுள்ள “மலையக சமூகம் ஒரு சமகால நோக்கு” மற்றும் “மலையக தோட்டத் தொழிலாளர்களின் நிலவுரிமை சவால்களும் சாத்தியங்களும்” ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழா கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு கொழும்பு தமிழ்ச் சங்கம் சங்கரபிள்ளை மண்டபத்தில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 23ஆம் திகதி சனிக்கிழமை மாலை 04.00 மணிக்கு இடம்பெற ஏற்பாடாகியுள்ளது.

சட்டத்தரணி பா.கௌதமன் தலைமையில் இடம்பெற உள்ள நூல் வெளியீட்டு விழாவில் கல்வியாளர்கள், இன்னாள்-முன்னாள் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

மலையக சமூகம் எதிர்நோக்கும் சமகால பிரச்சினைகள் குறித்து எழுதப்பட்டுள்ள இந்த நூல்களின் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளுமாறு விழா ஏற்பாட்டுக் குழுவினர் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles