‘எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த மற்றுமொருவரும் மரணம்’

எரிபொருள் வாங்குவதற்காக வரிசையில் காத்திருந்த மேலும் ஒருவர் இன்று (11) உயிரிழந்துள்ளார்.இதன்படி வரிசையில் நீண்டநேரம் காத்திருந்து ஏற்பட்ட தாக்கங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 05 ஆக அதிகரித்துள்ளது.

காலி, தவலம பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலைய வளாகத்தில், டீசல் பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த 43 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இன்று காலை முதல் அவர் வரிசையில் காத்திருந்துள்ளார் எனவும், மயங்கி விழுந்த அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார் எனவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் பொலிஸ் விசாரணைகளும் இடம்பெற்றுவருகின்றன.

Related Articles

Latest Articles