எரிபொருள் கொள்வனவுக்கான கடன் சான்று பத்திரம் வெளியிட்ட மக்கள் வங்கி

எரிபொருள் கொள்வனவுக்கான கடன் சான்று பத்திரம் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 42 தசம் 6 மில்லியன் அமெரிக டொலர் பெறுமதியான கடன்சான்று பத்திரம் மக்கள் வங்கியினால் வெளியிடப்பட்ட்டுள்ளது.

92 ஒக்டேன் பெற்றோல் 3 இலட்சம் பீப்பாய்களை கொள்வனவு செய்வதற்கான கடன் சான்று பத்திரம் இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது.

இதனிடையே, கடன் சான்று பத்திரங்கள் விரைவில் வெளியிடப்படும் நிலையில், இந்த வார இறுதிக்குள் பெற்றோலை  சந்தைக்கு விநியோகிக்க முடியுமென வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நேற்றைய தினம் தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

Related Articles

Latest Articles