தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறை செயற்கையானது என ஆளும் பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியினரின் பொய்யான பிரசாரத்தை நம்பி, பொதுமக்கள் தேவைக்கு அதிகமாக எரிபொருள் கொள்வனவில் ஈடுபட்டுள்ளதால் இந்தப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
எனினும், உண்மையில் சந்தையில் எரிபொருளுக்கு எவ்விதத் தட்டுப்பாடும் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (25) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.