எரி பொருள் , எரி வாயு விலைகள் அதிகரிக்கப்படாது

எரி பொருள் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகளை அதிகரிப்பதற்கு அரசாங்கம் இதுவரையில் எந்த தீர்மானத்தையும் மேற்கொள்ளவிலை என்று எரிசக்தி அமைச்சர் உதய கம்பன்பில இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானனே இன்றைய தினம் பாராளுமன்றத்தில் வாய் மூலம் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் உலக சந்தையில் எரிபொருளின் விலை குறைப்பினாலான பயன்களை நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி பருப்பு, ரின் மீன் ஆகியவற்றின் மூலம் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டார். ஆனால் நீண்ட நாட்களுக்கு இதனை வழங்க முடியாமல் போனது.

நாம் அன்று முன்வைத்திருந்த விலை தொடர்பான பட்டியல் குறித்து அரசாங்கம் அப்போது விமர்சனங்களை மேற்கொண்டது.

பாராளுமன்ற உறுப்பினர்:- தற்பொழுது எரிபொருள் மற்றும் எரிவாயு போன்றவற்றின் விலைகள் அதிகரிக்கப்படுமா?

அமைச்சர் :- ஒன்றரை வருட காலமாக நாம் இவ்வற்றின் விலைகளை அதிகரிக்கவில்லை. இறுதியாக 2019 ஆம் ஆண்டு செப்ரம்பர் முதலாம் திகதியே விலை அதிகரிப்பு இடம்பெற்றது. உலக சந்தையில் மசகு எண்ணெயின் தற்போதைய விலை 64 டொலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. உங்களது விலைப் பட்டியலுக்கு அமைவாக இவற்றின் விலையை அதிகரித்திருக்க வேண்டும். நாம் விலை அதிகரிப்பை மேற்கொள்ள வில்லை.

எரிபொருளின் விலை உலக சந்தையில் அதிகரித்த போதிலும் அவற்றின் சுமையை பொது மக்களின் மீது சுமத்துவதற்கு நாம் எதிர்பார்க்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles