எல்ல பகுதிக்கு சுற்றுலா சென்ற வெளிநாட்டு யுவதிகள் இருவர் விபத்தில் காயம்!

பண்டாரவளை , எல்ல பகுதிக்கு சுற்றுலா வந்த ஐரோப்பிய நாடான சுலோவேனியாவை சேர்ந்த இரு யுவதிகள், உந்துருளி விபத்தில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

23 வயதுகளுடைய இரு யுவதிகளே , எல்ல புகையிரத நிலையத்துக்கு அருகாமையில் நேற்று மாலை உந்துருளியில் செல்கையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

உந்துருளி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் காயமடைந்த இரண்டு பெண்களும் அயலவர்களின் உதவியுடன் மீட்கப்பட்டு 1990 காவு வண்டி மூலம் பதுளை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

 ராமு தனராஜா

Related Articles

Latest Articles