எல்ல பகுதியில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்த முற்பட்டார் கூறப்படும் நபரொருவர் எல்ல சுற்றுலா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணைகளின் பின்னர் பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் அவர் முற்படுத்தப்பட்டதும் சந்தேக நபரை மார்ச் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 28ஆம் திகதி பிற்பகல் எல்ல, கிடலெல்ல பகுதியை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு எல்ல சுற்றுலா பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எல்ல றொக்கிற்குச் செல்லவிருந்த அமெரிக்க சுற்றுலாப் பயணிகள் குழுவொன்றை சந்தேகநபர் வழிநடத்த முற்பட்ட போது, அவர்கள் அவருக்கு வழிகாட்டுதலை வழங்க மறுத்ததால், அவர்கள் மீது தாக்குதல் நடத்த முயற்சித்ததாக சுற்றுலாப் பயணிகள் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.
அப்போது, வெளிநாட்டு பெண் ஒருவர் குறித்த சம்பவத்தை ஒளி பதிவு செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அதன் பிரகாரம் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .
மேலதிக விசாரணைகளை எல்ல சுற்றுலா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு தனராஜ்
