எல்ல பகுதியில் ரயில் இருந்து தவறி விழுந்து ரஷ்ய பெண் படுகாயம்!

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த புகையிரதத்தில் இருந்து கீழே விழுந்தது ரஷ்ய நாட்டு பெண்ணொருவர் படுகாயம் அடைந்துள்ளார் என எல்ல பொலிஸார் தெரிவித்தனர். இன்று முற்பகல் வேளையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

எல்ல புகையிரத நிலையத்திற்கு சுமார் 1.5 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் புகையிரத பாதையில் அமைந்துள்ள கற்குகைக்குள் வீழ்ந்து பலத்த காயமடைந்த நிலையில் குறித்த பெண் தெமோதர வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருவதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று காலை பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த புகையிரதத்தில் குறித்த யுவதி எல்ல புகையிரத பாதையில் அமைந்துள்ள கற்குகை பகுதியில் புகைப்படம் எடுப்பதற்காக முயற்சி செய்த போது தவறி கீழே விழுந்தது இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ராமு தனராஜா

 

Related Articles

Latest Articles