ஏமாற்றிவிட்டது என்.பி.பி. அரசு: எரிபொருள் விலையேற்றத்தால் சஜித் கொதிப்பு!

பலவீனமான, வினைதிறனற்ற, பொய் சொல்லும், ஏமாற்றும் தற்போதைய அரசாங்கம் நாட்டு மக்களுக்கு பெரும் தீங்கு விளைவித்து வருகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அத்துடன், எரிபொருள் மீதான வரிகளை நீக்குவோம். துறைமுகத்தில் இறக்கப்படும் அதே விலையில் எரிபொருளை மக்களுக்கு பெற்றுத் தருவோம் என அறிவித்தவர்கள். ஆட்சிக்கு வந்த பிறகு எரிபொருள் விலையை அதிகரித்துள்ளனர் எனவும் அவர் கூறினார்.

ஊடகங்களுக்கு இன்று (01) விசேட கூற்றை முன்வைத்து கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

வாக்குறுதியளித்த படி எரிபொருள் விலையில் சலுகை எங்கே?
அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் வழங்கப்படும் கொமிஸ் எடுத்தல் நிறுத்தப்பட்டுள்ளனவா ? எரிபொருள்கள் மீதான வரிச்சுமைகள் நீக்கப்பட்டுள்ளனவா ? என்பன குறித்து நாம் இந்த அரசாங்கத்திடமிருந்து தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. துறைமுகத்தில் இறக்கப்படும் அதே விலையில் நுகர்வோருக்கு தற்போது எரிபொருள் வழங்கப்படுகின்றனவா என்பது குறித்தும் நாம் இந்த அரசாங்கத்திடமிருந்து தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

இந்த அரசாங்கம் இன்று மக்களை ஏமாற்ற பொய் சொல்லி, தவறாக வழிநடத்தி வருகிறது. சிரேஷ்ட பிரஜைகளினது சேமிப்புகளுக்கு விசேட திட்டமொன்றை முன்னெடுப்போம் என பிரஸ்தாபித்தனர். ஆனால் நடந்தது ஒன்றுமில்லை. சிரேஷ்ட பிரஜைகளுக்கான சேமிப்பு வட்டி வீதம் 15 வீதமாக அமையும் விதத்தில் சரிசெய்து தரப்படும் என தெரிவித்தனர். முன்னர் 15 இலட்சம் மற்றும் 10 இலட்சம் வைப்புத்தொகைகளுக்கு 15மூ வட்டி வழங்கப்பட்டன. இதனை தற்போது இல்லாது செய்துள்ளனர். புதிய சேமிப்புக் கணக்குகள், சிரேஷ்ட பிரஜைகளுக்கு கூடிய சலுகைகளை வழங்குவதாகவும் விளம்பரப்படுத்தப்பட்டன.

சிரேஷ்ட பிரஜைகளினது நிலையான வைப்புக்களுக்குப் பெற்றுத் தருவோம் என வாக்குறுதியளித்த 15 மூ வட்டியை எப்போது வழங்குவீர்கள் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பினார்.
நாட்டில் கொலைச் சம்பங்களும் அவ்வாறு காணப்படுகின்றன. கொலை கலாச்சாரம் தொடர்ந்து வருகிறது. அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள், குண்டர்கள் மற்றும் பாதாள உலகக் கும்பல்களால் துப்பாக்கிச் சூடுகளும் கொலைகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
இதனால் நாடு முழுவதும் உயிர் இழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டத் தேவையான எந்த வேலைத்திட்டமும் இந்த அரசாங்கத்திடம் இல்லையா என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு கேள்வி எழுப்பினார்.

அரசாங்கத்தால் பொதுப் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாது போயுள்ளன. ஆகவே தேசியப் பாதுகாப்புக்கு இது பிரச்சினையாக அமைந்து காணப்படவில்லை என அரசாங்கம் தொடர்ச்சியாக தெரிவித்து வருகிறது. பொதுமக்களின் பாதுகாப்பு தேசிய பாதுகாப்பு என்பதால், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விடயத்தில் அரசாங்கத்திற்கு பொறுப்பு காணப்படுகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

வாக்குறுதிகளை மீறி இந்த அரசாங்கம் தொடர்ச்சியாக மக்களை ஏமாற்றி வருகின்றது. தற்போது இந்த அரசாங்கத்திற்கு ஏமாற்றே மிஞ்சிப்போயுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles