ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலேயே அடுத்த ஆட்சி அமையும். அதற்கு மக்களும் ஆணை வழங்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
” சிங்கப்பூரை லீகுவான் மீட்டெடுத்தார். மலேசியாவை
மகாதீர் முகமது கட்டியெழுப்பினார். தனிநபர்களின் தூரநோக்கு சிந்தனைக்கு பின்னால் அனைவரும் திரண்டனர்.
தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பக்கம் அனைவரும் திரண்டுள்ளனர். எனவே, அடுத்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கே மக்கள் ஆதரவு வழங்குவார்கள். ஐ.தே.க. தலைமையிலேயே புதிய ஆட்சி மலரும்.” – எனவும் அகில விராஜ் குறிப்பிட்டார்.
