ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பங்களிப்புடன் பரந்தப்பட்ட அரசியல் கூட்டணி அமைப்பதே எனது ஒரே நோக்கமாகும் – என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
கட்சியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதால் தயாசிறஜ ஜயசேகர பிரிதொரு கட்சியில் இணைவார் என வெளியாகும் தகவல் தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” ஒருபோதும் நான் சுதந்திரக்கட்சியை விட்டு செல்லமாட்டேன், ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளதாகவும், ஐக்கிய மக்கள் சக்தி பக்கம் தாவ உள்ளதாகவும் வெளியிடப்பட்டுவரும் தகவல்கள் அரசியல் சூழ்ச்சிகாரர்களால் முன்னெடுக்கப்படுபவை.
நான் எந்தவொரு தவறையும் இழைக்கவில்லை. அதனால்தான் பொதுச்செயலாளர்பதவி தவிர ஏனைய பதவியை வழங்க தயார் என கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேனகூட தற்போது அறிவித்துள்ளார். கட்சி தலைமைத்துவத்தை கைப்பற்றும் திட்டம் என்னிடம் இல்லை. பரந்தப்பட்ட அரசியல் கூட்டணி அமைப்பதே நோக்கமாக உள்ளது.” – என்றார்.
