2024 தேர்தல் வருடம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமது பரந்தப்பட்ட அரசியல் கூட்டணியை ஜனவரி மாதமளவில் வெளிப்படுத்துவதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியில் 20 அரசியல் கட்சிகளும் சிவில் மற்றும் வெகுஜன அமைப்புகளும் அங்கம் வகிக்கவுள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கையை ஏற்கும் தரப்புகள் மாத்திரமே கூட்டணியில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளன என்று ஐமச பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தல்கள் நடத்தப்படும் என்று ஜனாதிபதி அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.