இன்று (06) பிற்பகல் 16 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்களை கைது செய்யப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 31 மற்றும் 24 வயதுடைய பசறை தெஹிகிடாகம பகுதியை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
பசறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய சந்தேகத்தின் பேரில் இரு இளைஞர்களை சோதனைக்கு உட்படுத்திய போது அவர்களிடம் இருந்து குறித்த ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பதுளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் .வசந்த கந்தேவத்தவின் பணிப்புரையின் பேரில், பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரபோப பியரத்ன ஏக்கநாயக் தலைமையில் மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் விசாரணையின் பின்னர் இரு சந்தேக நபர்களையும் பசறை நீதிவான் நீதிமன்றதாதில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ப சறை பொலிஸார் தெரிவித்தனர்.
ராமு தனராஜா
