சுமார் 3 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் மூன்று சந்தேக நபர்களை வத்தவளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான ‘முழு நாடுமே ஒன்றாக” தேசிய வேலைத்திட்டத்துக்கமைய வத்தளை, அவரக்கொட்டுவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது 25 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதன்பின்னர் ஏனைய இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்கள், பாதாள குழு உறுப்பினர் கெஹேல்பத்தர பத்மேவின் போதைப்பொருள் வியாபார வலையமைப்புடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுகின்றது.
இவர்கள் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.










