ஐஸ் போதைப்பொருளுடன் 30 வயது பெண் கைது!

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்த 30 வயது பெண்ணொருவர் களனி பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் 25 கிராம் 820 மில்லிகிராம் நிறையுடைய ஐஸ் போதைப்பொருள் , இலத்திரனியல் தராசு மற்றும் 2 இலட்சம் ரூபா பெறுமதியான பணம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேலியகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles