மலேசியாவிலிருந்து ஐஸ் போதைப்பொருளுடன் நாட்டிற்கு வந்த ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தின் விமான நிலைய பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடமிருந்து 5 கிலோ 26 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
51 வயதான சந்தேகநபர் கொத்தடுவ பகுதியை சேர்ந்தவரென பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில, சந்தேகநபரை அழைத்துச்செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வேபொட மற்றும் வாத்துவ பகுதியை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.










