கம்பளை, உலப்பனை பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் மாமி மற்றும் மருமகன் ஆகியோர் கம்பளை பொலிஸாரால் நேற்று (25) கைது செய்யப்பட்டுள்ளனர்.
67 வயது மாமியார் ஓய்வுபெற்ற ஆசிரியை என தெரியவருகின்றது. இவர்களிடமிருந்து 200 க ராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த ஓய்வுபெற்ற ஆசிரியையின் மகன் கடந்த 24 ஆம் திகதி ஜஸ் மற்றும் ஹொரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டிருந்தார்.
நீதிமன்றத்தில ; முற்படுத்தப்பட்ட பின்னர் 6 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இந்நிலையில் கம்பளை, உலப்பனை பகுதியில் உள்ள வீட்டில் சோதனை செய்த போது மாமியார் , மருமகன் இருவரும் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டனர்.
போதைப்பொருள் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட இரு தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவர்கள் கம்பளை, நாவலப்பிட்டிய, உலப்பனை போன்ற பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்தனர் என தெரியவருகின்றது.
இருவரையும் கம்பளை நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலதிக விசாரணை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
க. யோகா










