ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இலங்கை அணி 7 ஆம் இடத்தில் உள்ளது.
இன்று வெளியிடப்பட்ட ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியா அணி முதலிடத்தில் உள்ளது.
மெல்போர்ன் டெஸ்டில் வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்தியா 2 வது இடத்தை பிடித்து உள்ளது. இதை தொடர்ந்து அடுத்த ஆண்டு ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் இந்தியா விளையாட தக்க வைத்துக் கொண்டது.
கடந்த புதன்கிழமை நடந்த முதல் டெஸ்ட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக 101 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று நியூசிலாந்து மூன்றாவது இடத்தை உறுதிப்படுத்தி உள்ளது. நியூசிலாந்து 360 புள்ளிகளை பெற்று உள்ளது.
தொடர்ந்து இங்கிலாந்து 292 புள்ளிகளுடன் 4 வது இடத்திலும், 166 புள்ளிகளுடன் பாகிஸ்தான் 5 ஆவது இடத்திலும் உள்ளது. தொடர்ந்து தென்னாப்பிரிக்கா, இலங்கை, மேற்கிந்திய தீவுகள் , பங்களாதேஷ் ஆகிய அணிகள் உள்ளன.